விருதுநகர் | இரண்டு இருசக்கர வாகனம்நேருக்கு நேர் மோதி இருவர் பலி !

அருப்புக்கோட்டையில் எதிரே வந்த வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானத்தில் இருவர் பலியாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கு வயது 23. காரியாபட்டியில் உள்ள இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், இன்று காலை, புதிய இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்ய அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது […]

சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா !

சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படத்திற்கு இளையராஜாவின் பின்னணி இசை மக்களை ஈர்த்துள்ளனர்.படை தலைவன் படத்தில் யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக உருவாகியுள்ளதாக ட்ரெய்லர் உணர்த்துகிறது. மேலும்,ட்ரெய்லரின் இறுதியில், “ […]

இந்தியா – மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்பு படை !

இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் . கெங்ஜாய் தெக்சிலில் உள்ள நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே பயங்கரவாதிகள் நடமாடுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அதன் அடிப்படையில், இந்தியா – மியான்மர் எல்லை அருகே நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினர் 10 பயங்கரவாதிகள் சுட்டுகொட்டப்பட்டனர். இந்த நடவடிக்கை அசாம் ரைபிள்ஸ் பிரிவு மற்றும் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளையின் […]

பாலியல் வழக்கு |மதபோதகர் ஜான் ஜெபராஜ் நிபந்தனை ஜாமின்வழங்கியது -சென்னை உயர்நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜ் க்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்பவர் கோவை கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது,நிகழ்ச்சிக்கு வந்த 17 […]

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறக்க அனுமதி -தோட்டக்கலைத்துறை!

கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை இரவு 7 மணி வரை அனுமதிப்பதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சுற்றுலா பயணிகள் பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, நட்சத்திர ஏரி போன்ற […]

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !

காங்கோ நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெற்கு கிவு மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு […]

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1 ஆயிரத்து 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22-ந் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் 74 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் 72 ஆயிரத்து 120-ரூபாய்க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் […]

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது என பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என சிந்து நதி நீர் குறித்து பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் […]

மீண்டும் ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி தொடங்கும் -இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு !

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பினை இழந்துள்ளன. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு […]

சத்தீஸ்கரில் கனரக வாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு !

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ராய்ப்பூர்- பலோதாபஜார் சாலையில் உள்ள பனார்சி கிராமத்தில் திருமண விழாவில் கலந்துகொண்டு, மினி லாரியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த கனரக சரக்கு வாகனம் மீது மினி லாரி மோதி விபத்திக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் வந்த குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த […]