நியூயார்க் |சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விபத்து !
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹட்சன் நதியில் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதை பற்றி நியூயார்க் மேயர் தெரிவிக்கையில்,உயிரிழந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த […]
உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தொகையும் அரசு ஊழியர்களின் விவரமும் !
உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஊழியர்களில் நிர்ணயிக்கும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளார். அரசு துறைகளில் தேவைக்கு அதிகமாக ஊழியர்கள் இருப்பதாகக் கூறி, அவர்களைக் குறைக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி அதிக மக்கள் தொகைக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக அரசு ஊழியர்களைக் கொண்டிருக்கும் நாடான ஆஸ்திரேலியாவில்,1,000 மக்களுக்கு 143 அரசு ஊழியர்கள் நிர்னையித்துள்ளனர்.மேலும்,அந்நாட்டின் மொத்த அரசு ஊழியர்களில் 29 சதவீதம் பேர் அரசு ஊழியர்களாக உள்ளனர் […]
தஞ்சாவூர் | பல்லடத்தில் லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதி விபத்து !
பல்லடம் அருகே தனியார் ஆம்புலன்ஸ் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மனைவி கல்யாணி மற்றும் அவரது மகள் பபிதா ஆகிய மூன்று பெரும் சென்றுள்ளனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை சாலையோரம் […]
பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்த விவகாரம் – தலைமை ஆசிரியர் தற்காலிகமாக பணி நீக்கம் !
பொள்ளாச்சியில் பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஏப்ரல் 5ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இச்சூழலில் தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார். […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்பநிலை உச்சத்தை தொடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் 13ம் தேதி முதல் […]
உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மலம் கழிக்க வேண்டும் என தோணுதா ? அப்போ இது உங்களுக்கு தான் !
அதிக மன அழுத்தம் உடையவர்களுக்கு உணவு சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் உத்வேகம் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? இது, புதிய உணவுக்கு வழிவிடச் சொல்லி பெருங்குடலுக்கு வயிறு சமிஞை அளிக்கும் இயல்பான உடல் செயல்பாடு தான். ஆனால், இதேபோல் தினமும் நிகழ்கிறது என்றாலோ இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது என்றாலோ இது கவனிக்க வேண்டியது. பால் பொருள்கள், காரம் நிறைந்த உணவுகள் போன்ற குறிப்பிட்ட உணவுகள் சார்ந்த ஒவ்வாமை, அதிக […]
தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து 68 ஆயிரத்து 480ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கடந்த வாரம் இறுதியில் எதிர்பாராத வகையில் அதிரடியாக குறைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து, 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 200 […]
IPL 2025 | மீண்டும் கேப்டனாக களம் இறங்கும் மகேந்திர சிங் தோனி உற்சாகத்தில் ரசிகர்கள் !
சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த போட்டியில் 10 அணிககள் பங்கேற்று வருகின்றனர். 10 அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்புத் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியது. தொடர் தோல்வி காரணமாக ரசிகர்கள் தோனியின் மீதும் அணியின் மீதும் […]
கும்பகோணம் | நாகேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா !
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், தேருக்கு சிறப்பு பூஜைகளுடன் திரளான பக்தர்கள் நாகேஷ்வரா என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து […]
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு !
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி, கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கபட்டது. இந்நிலையில், இன்று இந்திய […]