தூத்துக்குடி|சங்கு குளிக்க கடலுக்கு சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு !
தூத்துக்குடி, அருகே, சங்கு குளிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர், மூச்சுத் திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தைச் சார்ந்த மாரியப்பன் மகன் மாயாண்டி, சங்கு குளிக்கும் மீனவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல், கனி என்பவரது படகில் ஆறு பேருடன் சென்ற மாயாண்டி, நடுக்கடலில் சங்கு குளிக்கும் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாயாண்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து […]
ஐ.பி.எல் 61 வது போட்டியில் அதிரடியாக விளையாடி ஐதராபாத் அணி வெற்றி !
நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஐதராபாத் அணி, அபார வெற்றிபெற்றதுடன் லக்னோ அணியை பிளேஆப் சுற்றிலிருந்து வெளியேற்றியது. நடப்பு ஐ.பி.எல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் […]
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், […]
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்-உச்சநீதிமன்றம்!
முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு சார்பில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு கேரளா முன்பு அனுமதி வழங்கியது என்றும், ஆனால் தற்போது, […]
ஈரோடு| முதிய தம்பதி கொலை வழக்கு-மேலும் ஒரு நபரை போலீசார் கைது!
ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் மேலும், ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி அவரது மனைவி பாக்கியம். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 1ஆம் தேதி இரவு ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் […]
தூத்துக்குடியில் ஆம்னி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் -பிரேமலதா விஜயகாந்த் !
கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் ”தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளாளன்விளை ஆலய திருவிழாவிற்கு கோவையில் இருந்து சென்றபோது விபத்துக்கு உள்ளாகி திரு.கெர்சோம், மோசஸ், ரவி கோயில் பிச்சை, ஸ்டாலின் (குழந்தை), வசந்தா திருமதி.ஜெனிபர் எஸ்தர், சைனி கிருபாகரன், ஆகியோர் வரும் வழியில் பாபநாசம் அணையில் குளித்துவிட்டு கருங்குளம் வழி வரும் பொழுது பேய்குளம் அருகில் உள்ள […]
சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்ய வேண்டும் – தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு !
தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்து 3 பேர் வெளியேறிய நிலையில் மற்ற 5 பேரும் உயிரிழந்தனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!
கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் […]
IPL 2025 | புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி வெளியேற்றம் !
மழை காரணமாக, பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா அணி போட்டியில் இருந்து வெளியேறீயது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஒரு வாரம் கழித்து, நேற்று போட்டிகள் மீண்டும் தொடங்க இருந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பெங்களூருவில் தொடர்ந்து மழை […]
பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் நாளைக்கு ஏவப்பட்ட உள்ளது -இஸ்ரோ தலைவர் நாராயணன்!
நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், பூமியில் உள்ள சிறிய பொருளையும் துல்லியமாக காட்டும் தன்மை கொண்டது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது 101வது ராக்கெட்டான PSLV-C61-ஐ நாளை, ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்படவுள்ளது. காலை 5:59 மணிக்கு ஏவப்பட உள்ள இந்த ஆர்ஐஎஸ்ஏடி-1பி என்ற செயற்கைகோள் மூலம் பூமியில் உள்ள சிறிய அளவிலான பொருட்களையும் துல்லியமாக கண்டறிய முடியும் என கூறப்படுகிறது. இதனிடையே, திருப்பதியில் […]