மூணாறில் வளர்ப்பு நாயை சிறுத்தை தூக்கி சென்ற சம்பவத்தால் மக்கள் அதிர்ச்சி !

மூணாறில் வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை தூக்கி சென்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள தேவிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வளர்ப்பு நாய் காணாமல் போயுள்ளது. அதனைதொடர்ந்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் நேற்று அதிகாலை, சிறுத்தை ஒன்று, வீட்டுக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த நாயை […]

நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் !

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இந்த சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் […]

தமிழகத்திற்கு 25% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீடு இடங்களுக்கு, தமிழகத்துக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 25% இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாரயணன் அமர்வு முன் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், […]

ராமநாதபுரத்தில் பெண்குழந்தை கழுத்தை அறுத்து கொலை -ஒருவர் கைது !

பரமக்குடி அருகே, இரண்டு வயது பெண் குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த உறவினரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த எமனேஸ்வரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் தேசிங்கு. இவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி டெய்சி. இவர்களது பெண் குழந்தை லெமோரியாவுக்கு இரண்டரை வயதாகிறது. இவர்களது உறவினர் வடிவேல் மகன் சஞ்சய், அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை குழந்தை லெமோரியாவை சஞ்சய் அப்பகுதியிலுள்ள […]

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி !

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் லக்னோ அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது . ஐ.பி.எல். தொடரின் 64-வது லீக் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 91 […]

சிவகங்கை கல் குவாரி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு !

சிவகங்கை அருகே கல் குவாரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் கடந்த 20ம் தேதி காலை 18 தொழிலாளர்கள் பாறையில் துளையிடும் பணியில் ஈடுட்டிருந்தனர். அப்போது, குவாரியின் மேற்பகுதியில் இருந்து ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் பாறைகளின் அடியில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்துவந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இதில் ஒடிசாவைச் சேர்ந்த பொக்லைன் […]

துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்திற்கு இடைக்கால தடை-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வடகர்நாடக – கோவா கடலோர பகுதிகளுக்கு அருகில் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிவரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், அதற்கடுத்த 36 மணி […]

முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் | சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ள பிரேமலதா விஜயகாந்த்!

பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.இந்தநிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த பயணத்தை குறித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் . 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கின்றார்.அது ஒருபுறம் இருக்க திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர்கள் மட்டுமே நிதி […]

தனியார் நிதி நிறுவன மோசடி |பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை – உயா்நீதிமன்ற மதுரைக் கிளை!

தனியார் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களின் பணத்தை மீட்டுத் தருவது அரசின் கடமை என உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மதுரையைச் சோ்ந்த முத்துக்குமரன் என்பவர் சென்னை உயா்நீதிமன்ற மதுரையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், நியோமேக்ஸ் தனியார் நிதி நிறுவனத்துக்கு மதுரை உள்பட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன என்று இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் இந்த நிதி நிறுவனத்தின் சொத்துகளை நிர்வாகிகள் விற்க […]