பறையிசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு இன்று பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிப்பு !

பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், நடிகை ஷோபனா உள்ளிட்டோருக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, ஒன்றிய அரசு மொத்தம் ஏழு பத்ம விபூஷன் விருதுகளையும், 19 பத்ம பூஷன் விருதுகளையும், 113 பத்மஸ்ரீ விருதுகளையும் கலைஞர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்தது. முதல் கட்டமாக, நடிகர் அஜித், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷன் உள்பட மொத்தம் 71 பேருக்கு ஏப்ரல் 28 அன்று விருதுகள் வழங்கப்பட்டன. […]

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம் !

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது என்றும், இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் […]

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீட்டிப்பு -தமிழ்நாடு அரசு உத்தரவு !

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமல்படுத்தியது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிகோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து […]

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை !

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது என்றும், இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்று முதல் 30-ஆம் தேதி வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் […]

69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதல் !

ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் 69-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகின்றனர். 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் […]

திருவான்மியூரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் திருட முயன்ற வடமாநிலத்தவர்கள் கைது !

சென்னை திருவான்மியூரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் முறைகேடாக பணத்தை திருட முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவான்மியூர் திருவள்ளூர் நகரில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில், மர்மமான முறையில் பணம் எடுக்கப்பட்டு வருவதாக எஸ்பிஐ நிறுவனத்தை சார்ந்தவர்கள் புகார் அளித்தனர். திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கருப்பு நிற அட்டையை […]

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 3 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 950 […]

“புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததால்” நிதி ஒதுக்கப்படவில்லை -ஒன்றிய அரசு பதில் !

புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பின் நிர்வாகி ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க […]

70 லட்சம் மதிப்பிலான கஞ்சா போதை பொருட்களை தீயில் எரித்து அழிப்பு !

தாம்பரம் மாநகர காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 70 லட்சம் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழி க்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் ஜி.ஜே. மல்டிகிளேவ் எனும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் நிறுவனம் உள்ளது. இங்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. தாம்பரம் மாநகர ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் மகேஸ்வரியின் தலைமையில், […]

காரைக்குடி கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டுப் போட்டி கோலாகலம்!

காரைக்குடி அருகே, கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, இலுப்பக்குடி புது குடியிருப்பு பகுதியில் உள்ள தர்ம முனிஸ்வரர் பூச்செரிதல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்த பின், வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் […]