ரஷியா விமான தளம் மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல் !
ரஷியாவின் விமான தளம் ஒன்றின் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியது. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போர் 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி […]
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு | குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை – மகளிர் நீதிமன்றம் அதிரடி !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]
“The Tile Bros” – கோயம்புத்தூரின் பெருமையை வெளிப்படுத்தும் டைல்ஸ் நிறுவனத் தலைவர் சந்தோஷ் குமார் !
கோயம்புத்தூரின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக திகழ்ந்து வருகிறது The Tile Bros (Pride of Tiles). கோயம்புத்தூரில் தோன்றிய ஒரு சிறிய முயற்சி இன்று தேசிய அளவில் பரந்து விளங்கும் வணிகமாக வலம் வருகிறது. “The Tile Bros (Pride of Tiles)” எனும் டைல்ஸ் விற்பனை நிறுவனத்தை 2012 ஆம் ஆண்டு திரு. சந்தோஷ் குமார் அவர்கள் நிறுவினார். தொடக்கத்தில் ஒரு கிளையுடன் துவங்கிய இந்த நிறுவனம், தற்போது 1,00,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்ட […]
7 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி !
7 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா உட்பட தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான தென்காசியில் உள்ள குற்றால அருவிகளிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடம் திரும்பி வந்தனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து உள்ளதால், குற்றாலத்தில் உள்ள […]
மதுரையில் இன்று நடைபெறுகிறது திமுக பொதுக்குழு கூட்டம் !
2026 தேர்தலை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது . தமிழகத்தின் முதல்வரும் திமுக கட்சியின் தலைவரும் ஆன மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஜுன்1 மதுரையில் மாபெரும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், 6,500 பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . 2026 தேர்தலை முன்னிட்டு […]
அதிரடியாக குறைந்த வணிக சிலிண்டரின் விலை -மகிழ்ச்சியில் வணிகர்கள் !
கடந்த இரண்டு வருடங்களாக ஏறு முகத்தில் இருந்த சிலிண்டரின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும்சூழலுக்கு ஏற்ப மாறுவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த […]
அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் – தமிழக அரசு அறிவிப்பு !
அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதி காண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 28 ஆம் தேதியில் நடைபெற்ற 2025 – 2026 மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்புக் காலம், 2021, ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து ஓராண்டாக உயர்த்தப்பட்டது என்றும் தற்போதைய விதிகளின்படி, மகப்பேறு விடுப்புக் […]
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு -விவசாயிகள் மகிழ்ச்சி!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து124 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில், முன்கூட்டியே தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே கேரளா – தமிழக மேற்கு தொடர்ச்சி […]
அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் – மலைவாழ் மக்கள் கோரிக்கை!
அழியும் நிலையில் உள்ள தங்களது பாரம்பரியக் கலையை மீட்டெடுக்க வேண்டும் என, கொடைக்கானல் தோடர் இன மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 62வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கொடைக்கானல் பூம்பாறை சஷ்டி புகழ் சார்பாக மலைவாழ் மக்களின் தோடர் நடனம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் இந்த நடனத்தை, தங்களது பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆடி வருகின்றனர். ஆடி மாதங்களில் நடவு செய்து விவசாயத்தில் ஈடுபடும்போது இந்த நடனத்தை அவர்கள் ஆடுவது […]
கொச்சியில் நடைபெற்ற சரக்குக் கப்பல் விபத்து பேரிடராக அறிவிப்பு -கேரள அரசு!
கொச்சி அருகே, சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை கேரள அரசு பேரிடராக அறிவித்துள்ளது. லைபிரீயன் நாட்டுக்கு சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று கடந்த 25ம் தேதி விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகம் நோக்கி வந்தபோது கடலில் மூழ்கத் தொடங்கியது. தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியோடு கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, கப்பலில் ஏற்றிவந்த 367 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84 மெட்ரிக் டன் […]