ஐ.பி.எல் | பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி-தனது முதல் கோப்பையை பெற்று அசத்தல் !
18-வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில், பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூர் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த […]
மதுரை அப்போலோ மருத்துவமனையில் தொடங்கியது வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் !
புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சியாக மதுரையில் உள்ள அப்போலோ கேன்சர் மையம், வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டத்தை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, வாய்ப் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை மதுரை அப்போலோ மருத்துவமனை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய அந்த மருத்துவமனையின் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். கே. பாலு மகேந்திரா, டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன் […]
இத்தாலி எட்ணா எரிமலை திடீர் வெடிப்பு -பதட்டத்தில் சுற்றுலா பயணிகள் !
இத்தாலியில் உள்ள எட்ணா எரிமலை வெடித்து சிதறியதால், அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் தலைதெறிக்க ஓடினர். ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். சுற்றுலா தளமாக இருக்கு இந்த எரிமலையை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருகின்றனர். இந்நிலையில், எட்னா எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. இதன் விளைவாக கரும்புகை வெளியேறியதால் சாம்பல் மேகங்கள் தென்பட்டன. இதனால் […]
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் […]
தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு காய்ச்சலால்-சுகாதாரத்துறை அறிவிப்பு !
தமிழகத்தில், கடந்த ஐந்து மாதங்களில் 7,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்எஜிப்ட் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். […]
கோவை அருகே, வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து !
கோவை அருகே, வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் கோவை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணி புரியும் பிரவீன் என்பவரும் வசித்து வருகிறார். […]
முறையாக செயல்படாத நெல் கொள்முதல் நிலையம் -விவசாயிகள் வேதனை!
பெரியபாளையம் அருகே, நெல் கொள்முதல் நிலையம் முறையாக செயல்படாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் சமீபத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, ஆவாஜிப்பேட்டையில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு சென்றுள்ளனர். போதிய இடவசதி, […]
நாளை கூடுகிறது ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் !
சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நாளை, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் படுகொலைக்கு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதலில் இந்தியா எந்தளவுக்கு பாதிப்பை எதிர்கொண்டன என்பது குறித்து ஒன்றிய அரசிடம் முழுமையான விளக்கம் இல்லை என எதிக்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. எனவே, ஆபரேஷன் […]
பிரபல திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார்!
மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். விக்ரம் சுகுமாரன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை வெளியான அவர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார். அடுத்து வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் நடித்தார். ‘ஆடுகளம்’ படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் […]
IPL | மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் அணி !
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இதையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் தகுதி சுற்று 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை […]