இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்து, தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த […]
மதுரையில் ஓட்டுநரை செருப்பால் அடித்து உதவி மேலாளர் பணியிட நீக்கம் !
மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை செருப்பால் அடித்து உதவி மேலாளர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணிகள் ஏராளமானோர் அரசு பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து […]
10 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 30 கோடிப் போ் பயணம்!
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடிப் போ் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மெட்ரோ ரயிலில், பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையம் – விம்கோ நகா், சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 2 […]
ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்த ரயில்வே துறை முடிவு !
புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகளை பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர். தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் […]
ஐ.சி.சி.’ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்துள்ள மகேந்திர சிங் தோனியின் பெயர் !
ஐ.சி.சி.,யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து, ‘ஹால் ஆப் பேம்’ விருதுகளை வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இப்பட்டியலில் புதிதாக ஏழு பேரை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி., அவர்களை கவுரவித்துள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று தந்த கேப்டனுமான, மகேந்திர சிங் தோனி பெயர் […]
தைவான் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கம் !
தைவான் தடகளப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. தைவான் ஓபன் சர்வதேச தடகள போட்டி தைபே சிட்டியில் 2 நாட்கள் நடந்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி நாளில், இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி, மூன்று முறை தேசிய சாம்பியனான வித்யா ராம்ராஜ், ரோஹித் யாதவ், பூஜா மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர். 2-வது நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தை […]
அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி!
சிட்லபாக்கம் அரசுக் காப்பகத்தில் தங்கியுள்ள சிறுமிக்கு, அங்குள்ள காவலாளி, பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சிட்லப்பாக்கத்தில் செயல்படும் அரசு பெண்கள் காப்பகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். தந்தை இழந்த நிலையில், 8ம் வகுப்புப் படித்து வரும் அவர், காலில் காயங்களுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையின் விசாரணையில், இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த காவலாளி தன்னிடம் தகாத முறையில் […]
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு !
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், திமுக சார்பில் […]
எலான் மஸ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ள அதிபர் டிரம்ப் !
ஜனநாயக கட்சியினருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளித்து ஆதரவு தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு முழு ஆதரவாக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் […]
கிளாம்பாக்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் -நேற்று ஒரு நாளில் 1.66 லட்சம் பேர் பயணம் !
கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் நேற்று மட்டும் 1.66 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சனிக்கிழமை பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்பட்டதால், வியாழக்கிழமை இரவு முதலே ஏராளமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல தொடங்கியிருந்தனர். இந்நிலையில் ஜூன் 4 முதல் ஜூன் […]