சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பலி !

சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஆண்டியாபுரம் பகுதியில் ஶ்ரீ மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், வழக்கம்போல் […]

தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழப்பு !

தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்பொழுது, அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ கதண்டுகள் திடீரென கலைந்து அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில், அவ்வழியாக சென்ற 5க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. இதனையடுத்து, அவர்களை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு […]

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. வி.எஸ்.அச்சுதானந்தன் ஆலப்புழாவில் உள்ள புன்னப்புராவில் 1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். 4 வயதிலேயே தாயையும் 11 வயதில் தனது தந்தையையும் இழந்த அவர் 23வது வயதிலேயே புன்னப்புரா போராட்டத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராக திகழ்ந்தார். 1938ம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்த அச்சுதானந்தன் கருத்து வேறுபாட்டால் 1940ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் […]

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 21- ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஏப்ரலில் நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்குப் பதிலடியாக மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான முதல் கூட்டத் தொடா் […]

சட்டமன்ற கூட்டத் தொடரில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த மராட்டிய அமைச்சர் மாணிக் ராவ் !

மராட்டியத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரில் அம்மாநில வேளாண் துறை அமைச்சராக உள்ள மாணிக் ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. […]

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்பதால் நாளை நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை மறுநாள் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை […]

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா 3 நாட்களில் 2வது முறையாக வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஃப்ரீ ஸ்டைல் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஃப்ரீ ஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர், ஒரு ஆண்டில் 5 கட்டங்களாக நடத்தப்படும். ஏற்கனவே 3 கட்டங்கள் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 4வது கட்டமாக அமெரிக்காவில் நடந்து […]

மதுரை ஆதீனத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று விசாரணை!

மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனத்திடம் சென்னை சைபர் கிரைம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர். கடந்த மே 2ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த மதுரை ஆதீனத்தின் காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு காரும் மோதிக்கொண்டன. இதில் இரு கார்களும் லேசான அளவில் சேதமடைந்தன. இதையடுத்து, சென்னை கட்டாங்குளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை காரை ஏற்றி […]

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு…சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர், அஜித்குமார் . பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின் பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய […]

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு !

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, […]