நாளை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !
தமிழகத்தில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 23 முதல் 27-ஆம் […]
அருப்புக்கோட்டையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த கணவரால் பரபரப்பு !
குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயியான இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், ஜெயதுர்கா, ஜெயலெட்சுமி என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக, சுந்தரவேலு தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதன் பின்னர் காவல் நிலையத்திற்கு சென்ற சுந்தரவேலு, தன்னுடைய […]
சென்னையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை -காவல் ஆணையர் அருண் உத்தரவு !
சென்னையில், மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வரும் நேரங்களில் தண்ணீர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரக்கூடாது என தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, வாக்கின்ஸ் தெரு சந்திப்பில், சிறுமி சவுமியா, இருசக்கர வாகனத்தில் தாயுடன் அமர்ந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி சவுமியா மீது ஏறி இறங்கியது. இதில் சிறுமி தலை நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி வேலை நேரங்களில் […]
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் […]
ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பழவேற்காட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற படகுப் போட்டி !
ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பழவேற்காட்டில் நடைபெற்ற படகுப் போட்டியில் முதல் பரிசு வென்றவருக்கு 1 லட்ச ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, பாரத் ஒற்றுமை படகு போட்டி நடைபெற்றது. பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்கள் இந்த படகு போட்டியில் கலந்து கொண்டனர். இந்தப் படகுப் போட்டியை, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி […]
அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 73 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து […]
வெடித்துச் சிதறிய விண்கலம் குறித்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க் !
வெடித்துச் சிதறிய விண்கலம் குறித்து ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாகியும் உலக பணக்காரர்களில் முதல் இருப்பவருமான எலான் மஸ்க், “இது வெறும் கீறல்தான்” எனப் பதிவிட்டுள்ளார். உலகத்தில் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆய்வு, சுற்றுலா உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ராக்கெட் சோதனையை ஸ்டார்ஷிப் […]
இந்தியா – குரோஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் நிறைவேற்றம் -பிரதமர் மோடி அறிவிப்பு!
இந்தியா – குரோஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் […]
ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய 110 இந்திய மாணவா்கள் !
ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம், ஈரானிலிருந்து 110 இந்திய மாணவா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு “ஆபரேஷன் சிந்து”-ஐ தொடங்கியுள்ளது. முன்னதாக, தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூன் 17 ம் […]
மாநகராட்சி, நகராட்சிகளில் ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவு !
மாநகராட்சி, நகராட்சிகளில் 1,132 இடங்களில் உள்ள காலனி உள்ளிட்ட ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் முன்னதாக சாலைகளின் பெயர்கள், தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டுப் பெயர்களை நீக்கி […]