சென்னை| அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், […]

ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா!

ஆஸ்ட்ரவா கோல்டன் ஸ்பைக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தி உள்ளார். செக் குடியரசு நாட்டில் நேற்று ‘ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்’ சர்வதேச தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரரும் பாரிஸ், டைமண்ட் லீக் போட்டிகளில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் பவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பியில் 83.45 மீட்டர் தூரம் வரை ஈட்டியை […]

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அங்குள்ள லீட்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 364 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.நான்காம் நாள் […]

கிண்டி ரேஸ் கிளப்பிடம் பசுமை பூங்கா அமைக்க-தமிழ்நாடு அரசு டெண்டர்!

கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்க. விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், ‘வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை […]

பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது !

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. […]

ஈரான் அமைதி பாதைக்கு திரும்பவில்லை எனில் தாக்குதல் தொடரும்-டிரம்ப் எச்சரிக்கை !

ஈரான் அமைதி பாதைக்கு திரும்பவில்லை எனில் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை வழியே ஊடுருவி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்து உள்ளார். இதனை தொடர்ந்து, ஹமாஸ் […]

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திரும்பியது கவலையளிக்கிறது – ஐ.நா. கவலை!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ […]

வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை -1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியதால் பரபரப்பு !

கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. கிலாவியா எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது வழக்கம். இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து 1000 மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்பு வெளியேறியுள்ளது. அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்காவில் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் […]

வால்பாறையில் சிறுத்தை கவ்வி சென்ற குழந்தை சடலமாக மீட்பு !

வால்பாறை அருகே சிறுத்தை கவ்வி சென்ற குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோவில் அருகே தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்முந்தா-மோனிகா தேவி தம்பதியரின் மகள் ரோசினி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை தூக்கிச் சென்றது. திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் குழந்தையின் தாய் அலறி அடித்துக் கொண்டு சத்தம் போட்டு […]

சிவகங்கையில் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் உயிரிழப்பு !

சிவகங்கை அருகே மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட நபர் தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவ அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மட்டிக்கரைப்பட்டி மட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் பிரான்மலை, அரளிபட்டி, வேங்கைபட்டி போன்ற ஊர்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி, கன்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர். தாங்கள் கொண்டு […]