தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதனால் இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நாளை […]

பிரதமர் மோடியை சந்தித்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு !

30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பிய அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு பிரதமர் மோடியைச் சந்தித்தனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா சென்ற 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவலை பரப்பி வருவதைத் தடுத்திட, ஒன்றிய அரசு, தி.மு.க.வின் கனிமொழி, காங்கிரசின் சசிதரூர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைத்தது. […]

மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் -அரசு அதிகாரிகளுக்கு மின்சார வாரியத் தலைவர் எச்சரிக்கை !

மக்களின் குறைகளைக் கவனிக்க வேண்டும் கவனிக்காத அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவிலேயே மின் வளர்ச்சியில் தமிழ்நாடு சீராக வழங்குவதில் முதன்மை மாநிலமாகவும் முதலிடமாகவும் உள்ளது என்றும் ஜவ்வாது போன்ற மலைப்பகுதிகளில் சிறப்பு […]

கேரள கடற்கரையில் மூன்றாவது நாளாக தீப்பற்றி எரிந்து வரும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் !

கேரள கடற்கரையில், சிங்கப்பூருக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று மூன்றாவது நாளாக தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான எம்வி வான் ஹை 503, கொழும்பில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 78 கடல் மைல் தொலைவில் இருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது. இது குறித்த தகவல் இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐஎன்எஸ் சூரத் கப்பல் சம்பவ […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்து, தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த […]

மதுரையில் ஓட்டுநரை செருப்பால் அடித்து உதவி மேலாளர் பணியிட நீக்கம் !

மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநரை செருப்பால் அடித்து உதவி மேலாளர் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணிகள் ஏராளமானோர் அரசு பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து […]

10 ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில்களில் 30 கோடிப் போ் பயணம்!

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடிப் போ் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மெட்ரோ ரயிலில், பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையம் – விம்கோ நகா், சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 2 […]

ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்த ரயில்வே துறை முடிவு !

புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கிக் கதவுகளை பொருத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே ரயில் நிலையத்தில் இருந்து மும்பை ரயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர். தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் […]

ஐ.சி.சி.’ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்துள்ள மகேந்திர சிங் தோனியின் பெயர் !

ஐ.சி.சி.,யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து, ‘ஹால் ஆப் பேம்’ விருதுகளை வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இப்பட்டியலில் புதிதாக ஏழு பேரை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி., அவர்களை கவுரவித்துள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்று தந்த கேப்டனுமான, மகேந்திர சிங் தோனி பெயர் […]

தைவான் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கம் !

தைவான் தடகளப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. தைவான் ஓபன் சர்வதேச தடகள போட்டி தைபே சிட்டியில் 2 நாட்கள் நடந்தது. நேற்று நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி நாளில், இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி, மூன்று முறை தேசிய சாம்பியனான வித்யா ராம்ராஜ், ரோஹித் யாதவ், பூஜா மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோர் தங்கப் பதக்கத்தை வென்றனர். 2-வது நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தை […]