வெடித்துச் சிதறிய விண்கலம் குறித்து பதிவிட்டுள்ள எலான் மஸ்க் !

வெடித்துச் சிதறிய விண்கலம் குறித்து ஸ்பேஸ் எக்ஸின் தலைமை நிர்வாகியும் உலக பணக்காரர்களில் முதல் இருப்பவருமான எலான் மஸ்க், “இது வெறும் கீறல்தான்” எனப் பதிவிட்டுள்ளார். உலகத்தில் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆய்வு, சுற்றுலா உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ராக்கெட் சோதனையை ஸ்டார்ஷிப் […]

இந்தியா – குரோஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் நிறைவேற்றம் -பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தியா – குரோஷியா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் […]

ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய 110 இந்திய மாணவா்கள் !

ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம், ஈரானிலிருந்து 110 இந்திய மாணவா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு “ஆபரேஷன் சிந்து”-ஐ தொடங்கியுள்ளது. முன்னதாக, தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூன் 17 ம் […]

மாநகராட்சி, நகராட்சிகளில் ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவு !

மாநகராட்சி, நகராட்சிகளில் 1,132 இடங்களில் உள்ள காலனி உள்ளிட்ட ஜாதிப் பெயரை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கெல்லாம் முன்னதாக சாலைகளின் பெயர்கள், தெருக்களின் பெயர்களில் இருந்த சாதிப் பின்னொட்டுப் பெயர்களை நீக்கி […]

நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம் !

கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 அக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியார் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர மற்ற நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை […]

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் உயிரிழப்பு !

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் அதே வேளையில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவற்றில் 21 பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் உள்ள ஒரு முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். […]

இந்தியாவில் கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து !

தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஏர் இந்தியாவின் AI – 143 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. டெல்லி […]

விமான நிலையம் அருகில் லேசர் ஒளியைப் எழுப்பக்கூடாது – சென்னை விமான நிலையம் அதிரடி!

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் ஒளியைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களின் மீது சமீபகாலமாக இரவு நேரத்தில் பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிகழ்வு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து விமான நிலைய நிர்வாகமும், விமான நிலைய பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனிடையே சென்னை விமான […]

வெடித்துச் சிதறிய இந்தோனேசியாவில் லெவோடொபி லகி-லகி எரிமலை – அதிர்ச்சியில் மக்கள் !

இந்தோனேசியாவில் லெவோடொபி லகி-லகி எரிமலை வெடித்துச் சிதறி வருவதால் சுற்றியுள்ள மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அதன்படி நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவில் லெவோடோபி லக்கி லக்கி என்ற எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை நேற்று தொடர்ந்து 3 முறை வெடித்து சிதறியது. அதில் இருந்து சுமார் 26 ஆயிரம் அடி தூரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை […]

ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி !

ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம் என உலகத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த […]