மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு -கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி தண்ணீர் திறப்பால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 78ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 73,452கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 117.39 அடியை எட்டியுள்ள நிலையில், விரைவில் அணை நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி முதல் […]
ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் !
ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி RAW ஏஜென்சி தலைவராக பதவியேற்கும் பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1989 ஆண்டு […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் !
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று […]
கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம்!
கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் வழக்கப்படி தனது குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடத்தப்படும் என்றும் தங்கள் குடும்பத்தினருக்குதான் முதல் மரியாதை வழங்கப்படும் என்றும், அந்த வகையில் ஈரோடு பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயில் மகா பெரிய குண்டம் விழாவில் தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். […]
345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையை தொடங்கிய இந்திய தேர்தல் ஆணையம் !
கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிடாத 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800-க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இவற்றில் பல இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 345 அரசியல் […]
சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை வடமாநில இளைஞர் ஒருவர் கைது !
சென்னை ஐஐடியில் படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்துவரும் 20 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 7:30 மணி அளவில் தனது கல்லூரி வளாகத்தில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த மாணவி செல்லும் வழியில் வந்த ஒரு நபர் கையில் கட்டையை வைத்துக் கொண்டு மாணவியிடம் செல்ஃபோன் எண்ணை கேட்டு முடியை பிடித்து […]
41 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது நபர் சுபான்ஷு சுக்லா!
41 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது நபர் என்ற சாதனையை விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது. இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி […]
சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!
சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்ட நெருக்கடியால் மாணவ மாணவியர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் காட்சிகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காணலாம் என்றும், சில நேரங்களில் விபத்துகளால் மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளதாகவும், ஆகவே, மாணவ மாணவியரின் பாதுகாப்பான பயணத்தை உறுதி […]
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 71 ஆயிரம் கன அடி நீர் திறப்பு !
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 71 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இரு அணைகளுக்கும் வரும் நீரை பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் 25 ஆயிரம் கனஅடி அளவிற்கு உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 12 […]
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் – டொனால்ட் டிரம்ப்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த அணு ஆயுதப் போரை, நான்தான் தடுத்து நிறுத்தினேன் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 18வது முறையாகப் பேசியுள்ளார். கடந்த மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தானே முன்னின்று சாதித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார். நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்றும் இரு […]