திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு -உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி !

திருபுவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு […]

எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் ஒத்திவைப்பு !

எதிர்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் […]

விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அதிரடி !

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெடி விபத்துக்களை தடுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வெடி விபத்து கூட நடக்க கூடாது என்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் 10 நாட்களுக்குள் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு […]

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளை கடித்த வெறிநாய்!

மதுரையில் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் வெறிநாய்க் கடித்து ஐந்து மாணவிகள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே கல்லூரி வளாகத்திற்குள் ஏராளமான நாய்கள் சுற்றி திரிவதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சிக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கல்லூரி வளாகத்தில் […]

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்து -19 பேர் பலி !

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம், கல்வி நிலைய வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் – 7 பிஜிஐ என்ற போர் விமானம், இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், தலைநகரான டாக்காவிற்கு வடக்கே உள்ள உத்தரா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும், விமானம் உடனடியாக தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, […]

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பலி !

சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஆண்டியாபுரம் பகுதியில் ஶ்ரீ மாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், வழக்கம்போல் […]

தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழப்பு !

தென்காசியில் விஷ கதண்டு கடித்து வயதான தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்பொழுது, அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ கதண்டுகள் திடீரென கலைந்து அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில், அவ்வழியாக சென்ற 5க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. இதனையடுத்து, அவர்களை அருகாமையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு […]

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. வி.எஸ்.அச்சுதானந்தன் ஆலப்புழாவில் உள்ள புன்னப்புராவில் 1923ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். 4 வயதிலேயே தாயையும் 11 வயதில் தனது தந்தையையும் இழந்த அவர் 23வது வயதிலேயே புன்னப்புரா போராட்டத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராக திகழ்ந்தார். 1938ம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்த அச்சுதானந்தன் கருத்து வேறுபாட்டால் 1940ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் […]

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆகஸ்ட் 21- ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஏப்ரலில் நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்குப் பதிலடியாக மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான முதல் கூட்டத் தொடா் […]

சட்டமன்ற கூட்டத் தொடரில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த மராட்டிய அமைச்சர் மாணிக் ராவ் !

மராட்டியத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரில் அம்மாநில வேளாண் துறை அமைச்சராக உள்ள மாணிக் ராவ் கோகடே செல்போனில் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தது சர்ச்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, ஷிண்டே பிரிவு சிவசேனா, அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சி இரண்டாக பிளவுப்பட்டு ஷிண்டே அணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு வைக்கிறது. உத்தவ் தாக்கரே அணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. […]