உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் -தமிழ்நாடு அரசு !

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 16ம் தேதியன்று தமிழ்நாட்டின் 14 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் ஜூலை 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றப்பட உள்ளன.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பத்துடன் குற்ற வழக்குகளின் விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குள் மாற்றுத்திறனாளிகள் வசிக்க வேண்டும், விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.