45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் -தமிழக அரசு அரசாணை வெளியீடு !

தமிழ்நாட்டில் உள்ள 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி ஒதுக்கி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 50 அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ.160 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
அதனடிப்படையில் முதல்கட்டமாக 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. இதில், கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரியில் ஆகிய உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கரூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட உள்ளது.
எஞ்சியுள்ள மற்ற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் விரைவில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது