ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பழவேற்காட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற படகுப் போட்டி !

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி பழவேற்காட்டில் நடைபெற்ற படகுப் போட்டியில் முதல் பரிசு வென்றவருக்கு 1 லட்ச ரூபாய் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, பாரத் ஒற்றுமை படகு போட்டி நடைபெற்றது.
பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் உள்ள மீனவ கிராம மக்கள் இந்த படகு போட்டியில் கலந்து கொண்டனர். இந்தப் படகுப் போட்டியை, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் பங்கேற்ற பைபர் படகுகள் வேகமாக வெற்றி இலங்கை நோக்கி நகர்ந்தன.இதில் முதல் பரிசு பெற்ற காட்டுப்பள்ளி குப்பம் படகு உரிமையாளருக்கு ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசும், கோப்பையும் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார்.
இரண்டாம் பரிசு பெற்ற படகு உரிமையாளருக்கு ரூ.75000 ரொக்கப் பரிசும், கோப்பையும், மூன்றாம் பரிசு பெற்ற படகு உரிமையாளருக்கு ரூ.50000 ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.