தருமபுரியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து !

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த உழவன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 4 வயதில் அர்திகா என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் தினமும் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை சாலையோரத்தில் உள்ள நரசிம்மன், சோனியா தம்பதியரின் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த அர்திகா பலத்த காயம் அடைந்தார். அப்போது சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த அவரது தாய் சோனியா அலறியடித்து வந்து பார்த்தபோது மகள் அர்திகா பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததை கண்டு உடனடியாக சிறுமி அர்திகாவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிறுமி அர்த்திகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறுமி சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகலறிந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.