தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) முன்னாள் தொண்டர் அணி செயலாளர் காலமானார்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) முன்னாள் தொண்டர் அணி செயலாளரும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான திரு. S. கணேசன் அவர்களின் மறைவு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (ஜனவரி 19, 2026) அதிகாலை 4 மணியளவில் இயற்கை எய்திய திரு. S. கணேசன் அவர்களின் இழப்பைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தனது இரங்கலைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில், கழக இளைஞர் அணி செயலாளர் திரு. வி. விஜயபிரபகர், கழக தலைமை நிலைய செயலாளர் திரு. ப. பார்த்தசாரதி (முன்னாள் எம்எல்ஏ), தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மறைந்த திரு. S. கணேசன் அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரு. S. கணேசன் அவர்கள் தேமுதிகவின் அயராத தொண்டராகவும், தேர்தல் பணிகளில் முக்கிய பங்காற்றியவராகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு கட்சியின் பல்வேறு அணிகளிலும் இருந்து ஆழ்ந்த இரங்கலை ஏற்படுத்தியுள்ளது.அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தேமுதிக குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts