சென்னைக்கு 890 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தற்போதைய நிலவரம் மற்றும் எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 890-950 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இதைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, அடுத்த சில நாட்களில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் ‘மோந்தா’ (Montha) என்ற பெயரில் புயலாகவும் வலுவடைய வாய்ப்புள்ளதாகக் கணிப்பு.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 24ஆம் தேதி காலை 5:30 மணிக்குத் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான இந்தத் தாழ்வு மண்டலம், மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கே 950 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு மேற்கு-தென்மேற்கே 420 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் , 25ஆம் தேதி மாலை வலுவடைந்து, 26ஆம் தேதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறும். 27ஆம் தேதி காலைத் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ‘மோந்தா’ புயலாக உருமாறும்.
சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாடு, தென் ஆந்திரா பகுதிகளில் 26 முதல் 28 வரை கனமழைக்கு வாய்ப்பு. குறிப்பாக 26-28 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிகக் கனமழை (heavy to very heavy rainfall) பெய்யும். இது சில இடங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த 22ஆம் தேதி வடக்கு கடலோர தமிழ்நாட்டில் நிலை கொண்டிருந்த well-marked low-pressure area மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 24 மணி நேரத்தில் சாதாரண low-pressure ஆக வலுவிழந்தது. இது சென்னையில் லேசான மழையை மட்டுமே ஏற்படுத்தியது.
எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள்:
மாவட்டங்கள் / பகுதிகள் எச்சரிக்கை நிலை கணிப்புக் காலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆரஞ்சு (Orange) அக்டோபர் 26-28
விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மஞ்சள் (Yellow) அக்டோபர் 25-26
புதுச்சேரி, தென் ஆந்திரா ஆரஞ்சு (Orange) அக்டோபர் 26-27
டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர்) மஞ்சள் (Yellow) அக்டோபர் 25-29
வங்கக்கடலில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். காற்றின் வேகம் 40-50 கி.மீ./மணிவரை இருக்கும். தாழ் பகுதிகளில் வசிப்பவர்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மழைக்கான தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு இருக்கலாம்.
இந்தத் தாழ்வு மண்டலம் வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தி, தமிழ்நாட்டில் மழைப்பொழிவை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
