“வானரன்” திரை விமர்சனம்
ஆரஞ்ச் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரித்து, ஸ்ரீராம் பத்மநாபன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய திரைப்படம் “வானரன்”. இப்படத்தில் நாகேஷின் பேரனும், ஆனந்தபாபுவின் மூத்த மகனுமான பிஜேஷ் நாகேஷ் அறிமுக கதாநாயகனாக நடிக்க, அக்ஷயா கதாநாயகியாகவும், லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல். பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ், சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர். உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம் பிஜேஷ் நாகேஷ் ஏழ்மையின் காரணமாக ஆஞ்சநேயர் வேடமணிந்து, வீதி வீதியாகச் சென்று காணிக்கை பெற்று வாழ்க்கை நடத்துகிறார். இந்நிலையில், அக்ஷயாவுடன் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால், விரைவில் அக்ஷயா இறந்துவிட, மகளைத் தன் உலகமாகக் கருதி வாழ்கிறார் பிஜேஷ். திடீரென மகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட, சிகிச்சைக்குப் பல லட்சங்கள் தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மகளைக் காப்பாற்ற பிஜேஷ் நாகேஷ் தவிக்கும் போராட்டமும், அதன் முடிவும் தான் படத்தின் மையக் கதை.நடிப்பு கதாநாயகனாகப் பிஜேஷ் நாகேஷ், ஏழ்மையில் வாழும் தந்தையின் தவிப்பை, தன் மகளின் சிறு ஆசைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் வேதனையை உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களைக் கண்கலங்க வைக்கிறார்.

கதாநாயகி அக்ஷயா, வரையறுக்கப்பட்ட காட்சிகளில் தோன்றினாலும், தன் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். பிஜேஷின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் வர்ஷா, இயல்பான நடிப்பால் படத்திற்கு மெருகூட்டியுள்ளார். நாமக்கல் விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்தின் முகபாவனைகளை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக நடித்து அசத்தியுள்ளார். ஜூனியர் டி.ஆரின் மேடைக் கலைஞர் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது. ஆதேஷ் பாலா, எஸ்.எல். பாலாஜி, லொள்ளு சபா ஜீவா, வெங்கட்ராஜ், சிவகுரு, ராம்ராஜ் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.தொழில்நுட்ப அம்சங்கள் ஷாஜகான் இசையமைத்த பாடல்கள் கேட்கவும் ரசிக்கவும் உகந்தவை. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்பப் பயணித்துப் படத்திற்கு வலு சேர்க்கிறது.

“வானரன்”திரை விமர்சனம்”வானரன்”திரை விமர்சனம்நிரன் சந்தரின் ஒளிப்பதிவு, முழுமையாக நிறைவு செய்யாவிட்டாலும், குறை இல்லாமல் உள்ளது. இயக்கம் இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன், பகல் வேஷம் எனும் கலையைப் பின்பற்றி ஆஞ்சநேயர் உள்ளிட்ட கடவுள் வேடமணிபவர்களின் வாழ்வியல், ஏழ்மையின் கஷ்டங்கள், தந்தை-மகள் உறவின் ஆழத்தை மனதுக்கு நெருக்கமாகச் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் “வானரன்” தந்தை-மகள் உறவின் ஆழத்தையும், வறுமையில் வாழும் மனிதர்களின் வலியையும் உணர்ச்சிகரமாகச் சித்தரிக்கும் ஒரு சிறந்த படைப்பு.
ஜெ.துரை

