இன்ஃபிளுன்சர்: ஒரு பிரமிக்க வைக்கும் இங்கிலாந்து திரைப்படம்.
இன்ஃபிளுன்சர் ஒரு முழு நீள ஆங்கில மொழி திகில் திரைப்படமாகும், இது இங்கிலாந்தில் இருந்து உருவாக்கப்பட்டு, பரபரப்பான மற்றும் ஆர்வமூட்டும் கதையை வழங்குகிறது.
இந்தக் கதை, பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில், இலங்கையின் பழமையான திகில் கதைகளை ஆராய பயணிக்கும் ஒரு தம்பதியினரைப் பற்றியது. ஆனால், அவர்களின் பயணம் அடர்ந்த காட்டில் சிக்கிக்கொள்ளும்போது, பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள், உண்மையான திகில் புராணங்களில் இல்லாமல், மனித இயல்பின் இருளில் இருப்பதைக் கண்டறிகின்றனர்.

நடிகர்கள்இப்படத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாகவும், மால்டாவைச் சேர்ந்த டேன் ஹாலண்ட் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த திறமையான நடிகர்களான துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா, மற்றும் தேவ அலோசியஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.தொழில்நுட்ப குழு
- இயக்கம்: நீரோ கில்பர்ட்
- ஒளிப்பதிவு: சிவசாந்தகுமார்
- எடிட்டிங்: சுஜித் ஜெயக்குமார்
இம்மூவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர், தற்போது இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள்.
- எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர்: ஞானதாஸ் காசிநாதர்
- நிர்வாக முகாமையாளர்: செல்லையா சுதர்ஷன்
- கலை இயக்கம்: V.S. சிந்து
- கலர் கிரேடிங்: பிபின் ஆண்டனி
தயாரிப்பு

- முதன்மை தயாரிப்பாளர்கள்: ஹரிசங்கர் ஜனார்த்தனம் (இந்தியர்), விதுசன் ஆண்டனி (யாழ்ப்பாணம்)
- இணை தயாரிப்பாளர்: ராபின் ஏ டவுன் சென்ட் (இங்கிலாந்து)
- தயாரிப்பு நிறுவனங்கள்: எட்டெர்னல் ஐகான் பிலிம்ஸ் மற்றும் நியூ பிச்
முதன்மை தயாரிப்பாளர் ஹரிசங்கர் ஜனார்த்தனம், பிரபல ஒளிப்பதிவாளர் ஜி. பி. கிருஷ்ணாவிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனர் மிஷ்கின் உடன் புகைப்படக் கலைஞராக 35-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர்.

இப்படத்தில் முதன்மை தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், புகைப்படக் கலைஞர் மற்றும் கேஃபராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறப்பம்சங்கள்இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையக மற்றும் ஈழத் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் இப்படத்தில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் தகவலாகும்.


