நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை !

நெல்லையில் காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர்-செல்வி தம்பதியினரின் மகன் கவின். இவர், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த இளைஞர் நெல்லை கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றும் தனது பள்ளி தோழியுடன் பழகி வந்துள்ளார்.

இதற்கு பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நாளடைவில் கவின் அந்தப்பெண்ணை காதலித்ததாகவும், அவரையே திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், நேற்று தனது தாய் மற்றும் உறவினர்களுடன் சிகிச்சைக்காக அவர் திருநெல்வேலி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இதனை அறிந்த பெண்ணின் சகோதரரும் மணிமுத்தாறு பட்டாலியன் காவல் துறை உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார்- கிருஷ்ணவேணி ஆகியோரது மகனுமான சுர்ஜித் தனது இரு சக்கர வாகனத்தில் கவினை ஆசை வார்த்தை கூறி பேச அழைத்து வந்துள்ளார்.

பின்னர், கே டி சி நகர் அருகே அஷ்டலட்சுமி நகர் முதலாவது தெரு அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டி கொலை செய்துவிட்டு, பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, உதவி காவல் ஆயவாளர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே, கவின்குமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts