அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு !

ஓடுபாதையில் தரையிறங்கிய போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு (அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மியாமிக்கு புறப்படவிருந்த இந்த விமானம் புறப்படுவதற்கு முன்பே உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் மொத்தம் 173 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

இந்த சம்பவத்தில் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதில், அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர் என்றும், எங்கள் பராமரிப்பு குழு விமானத்தை ஆய்வு செய்து வருகிறது.

பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவால் பலர் அச்சமடைந்துள்ளனர்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts