மேட்டூர் அணையின் நீர் வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு !
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 75,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 18,000 கன அடி நீரும் 16 மதகு கண் வழியாக 82,000 கன அடிநீரும் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்படுவதால், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதி மக்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

