இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை -மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் !Justice Center

மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன் இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், காலியாகும் இடங்களுக்கான தோ்தல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக முன்னுறுத்திய ஆறு வேட்பாளா்களும் போட்டியின்றி தோ்வாகினா்.

இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் நாளை பதவியேற்கவுள்ளார். இதற்காக டெல்லி புறப்பட்ட கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மக்களின் வாழ்த்துகளுடன் உறுதிமொழி எடுக்கவுள்ளேன் இது இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டுள்ள மரியாதை கடமை என்று தெரிவித்தார்.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts