மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளை கடித்த வெறிநாய்!

மதுரையில் மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் வெறிநாய்க் கடித்து ஐந்து மாணவிகள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதனிடையே கல்லூரி வளாகத்திற்குள் ஏராளமான நாய்கள் சுற்றி திரிவதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சிக்கு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கல்லூரி வளாகத்தில் இருந்த மாணவிகளை திடீரென கடித்து குதறியுள்ளது.
இதில், 5 மாணவிகளுக்கு கை, கால்களில் நாய் கடித்து காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த மாநாகராட்சி அதிகாரிகள் மாணவிகளை கடித்த நாய் உட்பட 5 நாய்களை பிடித்து சென்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி பொறுப்பு முதல்வர் சந்திரா தங்களது கல்லூரி வளாகத்தில் நாய்கள் சுற்றி திரிவது தொடர்பாக ஏற்கனவே மாநகராட்சிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினா