கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 71 ஆயிரம் கன அடி நீர் திறப்பு !

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 71 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன.

இரு அணைகளுக்கும் வரும் நீரை பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் 25 ஆயிரம் கனஅடி அளவிற்கு உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வருகிறது.

இதனிடையே கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நேற்று பிற்பகல் முதல் 46 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு அதிகரித்துள்ளது.

இதேபோல், மைசூர் மாவட்டத்தில் உள்ள கபிணி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீராக 25000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணி அணைகளில் இருந்து மொத்தம் 71 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts