கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் – மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கேப்டன் விஜகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான 100-வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக 4கே தரம் உயர்த்தப்பட்டு விரைவில் இப்படம் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.

மேலும்,கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலமாக விஜகாந்த் கேப்டன் விஜகாந்த் என்று மக்களால்
செல்லமாக அழைக்கப்பட்டார்.

பிலிம் விஷன் நிறுவனத்தின் ராமு இப்படத்தினை 4கே தரத்திலும், 7.1 சவுண்ட் மிக்ஸிங் முறையில் ரீமாஸ்டர் செய்திருக்கிறார்.

இப்படத்தின் மறுவெளியீட்டு உரிமையினை முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றி இருக்கின்றனர் . கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டு தேதி விரைவில் இப்படத்தின் குழுவினர் அறிவிக்கவுள்ளனர்.

1991-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இப்ராஹிம் ராவுத்தர் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியானது.

இதில் விஜயகாந்த், ரூபிணி, சரத்குமார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளராக இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் காட்சி அமைப்புகள், சண்டைக் காட்சிகள், பாடல்கள் என அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டது.

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Related Posts