சண்முக பாண்டியனின் “கொம்பு சீவி” படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை வெளியாகும்- படக்குழு அறிவிப்பு !

“கொம்பு சீவி” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மறைந்த தேமுதிக நிறுவுனரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் இளையமகன் ஆனா சண்முக பாண்டியன் ‘மதுர வீரன், படை தலைவன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து, தற்போது “கொம்புசீவி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன், சீமராஜா போன்ற நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார்.
தொடர்ந்து,தற்போது பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் ‘கொம்புசீவி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொன்ராம் இயக்கும் இந்தப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார்.
மேலும்,முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் தார்னிகா என்பவரும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சரத்குமார் நடுவில் அமர்ந்திருக்க, பக்கத்தில் துப்பாக்கியுடன் சண்முக பாண்டியன் நின்றுகொண்டிருக்கிறார்.

இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் பொன்ராம் அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார்.
இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தளத்தில் நல்ல வரவேற்பை
பெற்றுவருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.