வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை – அதிரடி குறைவு !

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 43 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஆயிரத்து 921 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருட்களின் விலையை நிர்ணையித்துக் கொள்ள ஒன்றிய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாத விலையை காட்டிலும் 43 ரூபாய் 50 காசுகள், வணிக சிலிண்டரின் விலையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதன் மூலம், வணிக சிலிண்டரின் விலை தற்போது ஆயிரத்து 921 ரூபாய் 50 காசுகள் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டு இன்று முதல் தொடங்கும் நிலையில், வணிக சிலிண்டர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, வீட்டு பயன்பாட்டிற்கான விலை 818 ரூபாய் 50 காசுகளாகவே தொடர்கிறது.