திருவண்ணாமலையில் அரசு பேருந்தும் கரும் நேருக்கு நேர் மோதி 4 பேர் உயிரிழப்பு !

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையாறில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.
அதேசமயம் பாண்டிச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கைலாஷ், சதீஷ்குமார், சாருஷ் ஆகியோர் பெங்களூரில் லாரி உரிமையாளர் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பாண்டிச்சேரி நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, திருவண்ணாமலை அடுத்த காட்டுக்குளம் பகுதியில் வந்தபோது, அரசு பேருந்தும்,பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்றுக் கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.