கோவில்பட்டி அருகே லார் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு !

கோவில்பட்டி அருகே லார் மீது கார் மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதியதியாக பணிபுரிந்து வரும் பூர்ன ஜெய ஆனந்த், நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர் குமார், காவலர் நவீன்குமார், ரெக்கார்டு கிளார்க் வாசு ராமசந்திரன், வழக்கறிஞர் தனஞ்செய ராமசந்திரன் ஆகியோர் திருச்செந்தூர் வந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டம் மதுரை பைபாஸ் ரோடு, கோவில்பட்டி அருகே மேல கரந்தை ஜங்ஷன் அருகே முன்னால் ஜிப்சம் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி மீது இவர்களது கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபததில் ஸ்ரீதர்குமார், நவீன்குமார், வாசு ராமநாதன், தனஞ்செய ராமசந்திரன் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த் மற்றும் அலுவலக உதவியாளர் உதயசூரியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருப்புகோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக, லாரியை ஓட்டிவந்த கூடலூர் மாவட்டம் பொம்மரக்குடியை சேர்ந்த விஜய் ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்