தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழில் வெளியீடு !

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 8 முதல்நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. 3 முதல்நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி கோவையின் சாத்தான்குளம், ஒத்தக்கல் மண்டபம், சேலம் பி.என். பட்டி, திருவள்ளூரில் திருமழிசை, தஞ்சாவூரில் பேராவூரணி, ஈரோட்டில் நம்பியூர், மதுரையில் வாடிப்பட்டி, கிருஷ்ணகிரியில் பர்கூர் ஆகிய பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தேனியின் பழனிசெட்டிபட்டி, மேலசொக்கநாதபுரம், கன்னியாகுமரியின் குலசேகரம், இடிகரை, கோவை செட்டிபாளையம், மோபிரிபாளையம், சுலீஸ்வரன்பட்டி, தொண்டாமுத்தூர், திண்டுக்கல் அகரம், செவுகம்பட்டி, தென்காசி மேலகரம், ராமநாதபுரம் முதுகுளத்தூர் உள்ளிட்டப் பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன