ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய 110 இந்திய மாணவா்கள் !

ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம், ஈரானிலிருந்து 110 இந்திய மாணவா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு “ஆபரேஷன் சிந்து”-ஐ தொடங்கியுள்ளது.
முன்னதாக, தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூன் 17 ம் தேதி, வடக்கு ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வந்த 110 இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் காலை 5.30 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். இவா்களில் 90 போ் காஷ்மீா் பள்ளத்தாக்கைச் சோ்ந்தவா்கள் என தெரியவந்துள்ளது. மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக, இந்திய அரசு தெரிவித்துள்ளது